பிளான் பண்ணி பண்ணனும் (திரைப்பட விமர்சனம்)

10

படம்: பிளான் பண்ணி பண்ணனும்

நடிப்பு: ரியோ ராஜ், ரம்யா நம்பீசன். எம் எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், தங்கதுரை, ஆடுகளம் நரேன், முனிஷ்காந்த், பால சரவணன்

ஒளிப்பதிவு: பி.ராஜசேகர்

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: ராஜேஷ்குமார், எல்.சிந்தன்

இயக்கம்:பத்ரி வெங்கடேஷ்

ரியோ ராஜ், பால சரவணன் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள். பால சரவணனின் தங்கை, அண்ணனின் பேச்சை தட்டாமல் நடப்பவர். அவரை பெண் பார்க்க வருபவர்களிடம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் திடீரென்று வீட்டைவிட்டு காதலனுடன் ஓடிவிடுகிறார். இதையறிந்து அதிர்ச்சி அடையும் பால சரவணன் தங்கையை தேடுவதற்கு தன்னுடன் ரியோராஜையும் அழைத்துச் செல்கிறார்  தங்கையை காதலனுடன் ஓட விட்ட ரம்யா நம்பீசனை  மடக்கி விசாரிக்கின்றனர். அவர் கேரளாவில் காதல் ஜோடி இருப்பதாக சொல்ல அவர்களை தேடி எல்லோரும் கேரளா செல்கின்றனர். இதற்கிடையில் ரம்யா அமெரிக்காவில் கிடைத்த வேலையை மிஸ் செய்துவிடக்கூடாது என்று பரபரக்கிறார். காதல் ஜோடி கிடைத்ததா? ரம்யாவின் அமெரிக்க கனவு என்னவானது? ஹீரோ ரியோராஜின் நிலை என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பிளான் பண்ணி பண்ணனும் என்ற டைட்டிலுக்கும் கதைக்கும் ஏக பொருத்தமாக ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. அண்ணனுக்கு அடங்கி நடப்பதுபோல் நடிக்கும் பால சரவணன் தங்கை பிளான் பண்ணி காதலனுடன் ஓடியதும் காட்சிகள் களைகட்டுகிறது.

என்னை கேட்காமல் யாருக்கும் காபி கூட  என் தங்கை தரமாட்டாள் என ஜம்பம் பேசும் பால சரவணன் தங்கை ஓடிவிட்டாள் என்று தெரிந்ததும் கதறுவது காமெடியோ காமெடி. அவரை சமாதானப்படுத்தும் ஹீரோ ரியோ ராஜ் பிறகு தங்கையை தேட செல்வதும் ரம்யா நம்பீஸன்தான் பால சரவணன் தங்கையை காதலனுடன் ஓட விட்டார் என்று தெரிந்து அவரை பிடித்து விசாரிப்பதும்  பிறகு அவரையும் அழைத்துக்கொண்டு தங்கை இருக்கும் இடத்தை தேடி செல்வதுமாக காட்சிகள் இறக்கை கட்டிக்கொண்டு பறகிறது.

ஊரில் சென்று பார்க்கும்போது தனது தங்கை பணக்கரர  மாப்பிளையை காதலிப்பதை அறிந்து பால சரவணன் பம்முவதும் அவருக்கே திருமணம் செய்துவைக்க சம்மதிப்பதும் சீபோ காமெடியாக இருந்தாலும் கலகலக்க வைக்கிறது.

ரியோ ராஜ் எதார்த்தமான இளைஞராக நடித்திருக்கிறார். ரம்யா நம்பீஸன் மீது இவர் தனது காதலை காட்டுவார் என்று நினைத்தால் அந்த பாணியில் இல்லாமல் அவரை அமெரிக் காவுக்கு அனுப்பி வைப்பதிலும், மாமன் முனிஷ்காந்த்துக்கு கட்டி வைப்பதிலுமாகவே குறியாக இருந்து நல்லபிள்ளை பேரெடுக்கிறார்.

எம் எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், தங்கதுரை எக்ஸ்ட்ரா காமெடிக்கு உதவி இருக்கின்றனர்

கலகலப்பாகவே கதைமுடிந்துவிடுமோ என்று பார்த்தால் திடீரென்று அதில் மாரிமுத்தைவை வில்லனாக களம் இறக்கி விட்டு கதையில் டிவிஸ்ட் ஏற்படுத்துகிறார் இயக்குனர். ரோபோ சங்கர்,

ஒளிப்பதிவாளர் பி.ராஜசேகர் வேகமாகவும், பசுமையாகவும காட்சிகளை படமாக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை  காட்சிக்கு தேவையான இடங்களில் சரியாக ஒலிக்கிறது.

காதலை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் பத்ரி வெங்கடேஷ் .

பிளான் பண்ணி பண்ணனும் – ஜனரஞ்சக காமெடி.

 

Leave A Reply

Your email address will not be published.