நடிப்பு: மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோஹரன், அம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்த்ரம், தினேஷைன்
தயாரிப்பு:: ட்ரையம் ஸ்டுடியோ, எஸ்.சாண்டி
இசை: டஷ்டின் ரிதுன் ஷா
ஒளிப்பதிவு: அசலிஷாம் பின் முஹமத் அலி
இயக்கம்: ஜே.கே.விக்கி
அன்பு, குரு மற்றும் ஷங்கர் மூவரும் நண்பர்கள். அன்பு கால் ஊனமுற்றவர். இவர் பண்டையகால நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். ஒருநாள், பழங்கால நாணயம் ஒன்றை வைத்து நாம் ஆவியை வர வழைத்து பேசுவோம் என்று முடிவெடுத்து அமானுஷ்ய சக்தியிடம் பேசுகிறார்கள். அந்த அமானுஷ்ய சக்தி தன் பெயர் மல்லிகா என கூற, அடுத்தடுத்த நாட்கள் அந்த ஆவியிடம் மூவரும் பேசி வருகின்றனர். ஒருநாள் இரவு மூவரில் ஒருவரான குரு இறந்து விட, மல்லிகா ஆவி தான் குருவை கொன்று விட்டது என்று முடிவு செய்கிறார்கள் ஷங்கரும் குருவும். அந்த நாணயத்தின் மறுபக்கம் தான் என்ன .? குரு இறப்புக்கு யார் காரணம்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பது படத்தின் கதை.
நண்பர்களாக நடித்திருக்கும் தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன்நாதன், கணேசன் மனோகரன் ஆகியோர் நடிப்பது போலன்றி மிக இயல்பாகப் பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.
ஆராய்ச்சி மாணவியாக முக்கிய வேடமேற்றிருக்கு ஹம்சினி பெருமாள் படத்துக்குத் திருப்புமுனையாக இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் முகமதுஅலி இதுவரை பார்த்திராத மலேசியப்பகுதிகளை நமக்குக் காட்டியிருக்கிறார்.
ஷாவின் இசையும் ஜேசனின் ஒலிவடிவமைப்பும் திகில் ஏற்படுத்துகின்றன.
ஆவிகள் பற்றி எழுதும் பத்திரிகையாளராக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணா, பொறுப்புடன் நடித்திருக்கிறார். படத்தில் மதுரையைச் சேர்ந்தவராக வருகிறார்.படத்தில் அவர் பெயர் முருகன். அவற்றையும் திரைக்கதையில் சேர்த்து மலேசியாவையும் தமிழ்நாட்டையும் பண்பாட்டுக் கண்ணியில் இணைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே.விக்கி.
பெயருக்காக. அமானுஷ்யம் என்றில்லாமல் ஒரு சரித்திர சம்பவத்தை பின்னணியாக வைத்து கதையை இயக்கி இருக்கும் இயக்குனர் ஜே.கே.விக்கி கிளைமாக்ஸுக்கு பிறகு அனைவரின் கவனத்திலும் வந்து நிற்கிறார். அவரே எடிட்டரும் என்பதால் காட்சிகளை சுவாரஸ்யம் குன்றவிடாமல் பார்த்துக் கொண்டிருக்குறார். படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் கிளைமாக்ஸில் லீட் கொடுத்துவிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் அசலிஷாம் பின் முஹமத் அலி கதைக்கு தேவையான எல்லா யுக்திகளையும் சரியாக கையாண்டிருக்கிறார்.
இசை அமைப்பளர் டஷ்டின் ரிதுன் ஷா சும்மாவே அலற விடாமல் கதையின் நேர்த்தியை ரசிக்கவிட்டிருப்பது. அருமை.
மொத்தத்தில் பூ சாண்டி வரான் – ரசிக்கத்தக்க படம்