பொன் மாணிக்கவேல் (திரைப்பட விமர்சனம்)

0

படம் : பொன் மாணிக்கவேல்
நடிப்பு: பிரபுதேவா, நிவேதா பெதுராஜ், மகேந்திரன், சுரேஷ்மேனன்,
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: கே.ஜி.வெங்கடேஷ்
தயாரிப்பு: நேமி சந்த் ஜபக், ஹிதேஷ் ஜபக்
இயக்கம்:ஏ.சி.முகில் செல்லப்பன்
ரிலீஸ்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

நகரில் தீடீரென்று நீதிபதி ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதுடன் அவரது தலையும் துண்டிக்கப்பட்டி ருக்கிறது. கொலை யாளியை கண்டுபிடிக்க சிறப்பு போலீஸ் அதிகாரி பிரபுதேவா தலைமை யில் போலீஸ் படை அமைக்கப் படுகிறது. பிரபுதேவா துரித நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று பார்த்தால் மெத்தனமாக செயல்படுகிறார். ஒரு கட்டத்தில் இந்த கொலைக்கு தொழில் அதிபர் சுரேஷ்மேனன் காரணமாக இருப்பாரோ என்ற சந்தேகத்தில் அவருடன் நட்பாக பழகி அவரது அந்தரங்க விஷயங்களை கண்டு பிடிக்கிறார் பிரபுதேவா. அப்போது தான் சுரேஷ் மேனன் ஒரு பினாமி. அவருக்கு மேல் ஒரு வில்லன் இருக்கும் விஷயம் தெரியவருகிறது. அவரை பிடிக்க பிரபுதேவா வலை பின்னுகிறார். இதில் அந்த வில்லன் சிக்கினானா? நீதிபதி கொலைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
பிரபு தேவாவை நடனமாடி பார்த்திருக்கும் ரசிகர்கள் இதில் பொன் மாணிக்க வேல் என்ற அதிரடி ஆக்‌ஷன் போலீஸ் அதிகாரியாக பார்ப் பார்கள். நீதிபதி கொலை வழக்கு விசாரணைக்கு செல்ல ஆர்வம் காட்டாமல் குற்றவாளிகளை அடித்து விசாரிக்கும் இன்ஸ் பெக்டரை அதட்டி கப்சிப் ஆக்குவது ஏன் என்பது முதலில் புரியாத புதிராக இருக்கிறது.
இன்ஸ்பெக்டரை கடத்தி வைத்திருக்கும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்யும் பிரபுதேவா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார்.
கடத்தல் கும்பலிடமிருந்து ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரும் பிரபு தேவா அந்த பெண் தன்னைப்பார்த்து பயத்தில் அலறுவதை கண்டு கண்கலங்கி நடிப்பில் மிளிர்கிறார் பிரபு.
பிரபுதேவாவின் மனைவி யாக நிவேதா பெதுராஜ் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் ஓவராக டென்ஷனை ஏற்படுத்தி விடாமலிருக்க அவ்வப் போது கிக்காக பேசி ரிலாக்ஸ் ஏற்படுத்துகிறார்.
மறைந்த மகேந்திரன் இடைவேளைக்கு பிறகு மனதைதொடும் ஒரு பாத்திரத்தில் தோன்றி நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார். சுரேஷ்மேனன் வில்லத் தனம் எடுபடுகிறது.
கே ஜி வெங்கடேஷ் கேமரா ஒரு ஆக்‌ஷன் கதைக்கு தேவையான காட்சிகளை பக்கவாக படமாக்கி இருக் கிறது.
டி.இமான் மெலடிகளும் ஒரு குத்தாட்ட பாட்டும் ஜோர்.
இயக்குனர் ஏ.சி.முகில் செல்லப்பன் பிரபு தேவாவை வேறு களத்தில் இறக்கி விட்டு அந்தர் செய்திருக்கிறார்.
பொன் மாணிக்கவேல் – ஆக்‌ஷன் அசத்தல்.

Leave A Reply

Your email address will not be published.