கோதாவரியில் ‘பொன்னியின் செல்வன்’

8

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைப்பில் பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் ஆந்திராவில் உள்ள  சிங்கம்பள்ளி மற்றும் பப்பிகொன்டலு கிராமங்களுக்கு இடையில் கோதாவரி ஆற்றங்கரையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அங்கு சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தயாராகி வரும் சரித்திரப் படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் முழு முயற்சியுடன் படமாக்கி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.