பவர்ஸ்டார் – வனிதா நடிக்கும் ” பி க் க ப் “

1

 

நாயகனாக, குணசித்திர நடிகராக, நகைச்சுவை நடிகனாக தயாரிப்பா ளராக அரசியல்வாதியாக பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்து கொண் டிருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் அடுத்து இசையமைப்பாளராக அடி எடுத்து வைக்கிறார்.

2 எஸ். எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் “. பி க் க ப் ” படத்தில்தான் அவர் இசையமைப்பாளராக களம் இறங்குகிறார்.

பிரபல இசையமைப் பாளர்கள் இதில் பாடுவதற்கு தயாராக உள்ளனர்.

பவர்ஸ்டார் சீனிவாச னுடன் வனிதா விஜய குமார் ஜோடியாக நடிக்கி றார். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையா ளரான தமிழ்செல்வன், செந்தில், ‘ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் உள்ளது.

சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.

பவர்ஸ்டாரை மூன்றாவ தாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகி றார் வனிதா. அந்த பங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்கிறோம். படத்தில் காமெடி பிரதானமாக இருக்கும். ” பிக்கப்” படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங் களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக் கதை, வசனம், எழுதி, இயக்கத்துடன் செமத்தியான பாடல் களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு ” வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். PRO விஜயமுரளி, கிளாமர் சத்யா

Leave A Reply

Your email address will not be published.