22 வருடங்களுக்கு பிறகு கமலுடன் இணைந்து நடிக்கும் பிரபுதேவா

11

கமல்ஹாசன் ‘விக்ரம்’ பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி படங்களை இயக்கி பிரபலமானவர். தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை டைரக்டு செய்துள்ளார்.

விக்ரம் பட வேலைகள் தொடங்கி உள்ளன. கமல்ஹாசன் தோற்றத்துக்கான போட்டோ ஷூட்டையும் நடத்தி முடித்துள்ளனர். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை அணுகினர். அவரிடம் கால்ஷீட் இல்லாததால் பிரபுதேவாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபுதேவாவும் கமலுடன் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 1998-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற காதலா காதலா படத்தில் கமல்ஹாசனும், பிரபுதேவாவும் சேர்ந்து நடித்து இருந்தனர். 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.