தெலுங்கு ஹிட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபுதேவா

1

முதன்முதலில் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானாலும், நடிகர் பிரபுதேவாவை ஸ்டார் இயக்குனர் அந்தஸ்திற்கு உயர்த்தியது பாலிவுட் திரையுலகம் தான். அதைத்தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனராகவும் இரட்டை குதிரை சவாரி செய்து வந்த பிரபுதேவா, கடந்த மூன்று வருடங்களில், ஹிந்தியில் சல்மான்கானை வைத்து தபாங்-3 மற்றும் சமீபத்தில் வெளியான ராதே என இரண்டு படங்களை இயக்கினார்.

ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான ஒரு படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா ஏற்கனவே வாங்கியுள்ளார். இதன் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள், இது எந்த படத்தின் ரீமேக் என்பது குறித்து, தற்போதைக்கு படத்தின் தயாரிப்பாளரும், பிரபுதேவாவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.