மீண்டும் படம் இயக்க வரும் பிரித்விராஜ்

1

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் நடிகராவதற்கு முன்னால் இணை இயக்குனராக பணியாற்றிவர் என்பதால் படம் இயக்கும் ஆர்வம் இருந்தது.

இதையடுத்து லூசிபர் படம் மூலம் டைரக்டரானார். இந்த படத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சுவாரியர் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது. அதன்பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள பிருதிவிராஜ் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்பிரான் படத்தை இயக்க முடிவு செய்தார்.

ஆனால் பட வேலைகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய படமொன்றை விரைவில் இயக்க இருப்பதாக பிரித்விராஜ் அறிவித்து உள்ளார். “புதிய படம் இயக்குவதற்கான கதையை தேர்வு செய்து விட்டேன். மீண்டும் கேமராவுக்கு பின்னால் செல்ல இருக்கிறேன். படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.