தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி அறிக்கை..

தயாரிப்பாளர்களின் நலன் ஒன்றே இலக்கு

22

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேர்வான என்.முரளி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த வெற்றியை 5 ஆண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்து சிறப்பாக செயலாற்றிய அனைவரின் அன்பையும் பெற்ற என் தந்தை இராமநாராயணனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
தயாரிப்பாளர்களின் நம்பிக்கையினை ஒருபோதும் மறக்க மாட்டேன். ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களின் நலன் ஒன்றே இலக்கு என்ற வகையில் தயாரிப்பு தொழில் மேன்மையடைய உறுதியுடன் உழைப்பேன் என்று தெரிவித் துக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித் துக்கொள்கிறேன். அதே வேளையில் என்னுடன் சேர்ந்து வெற்றி பெற்ற அனைவரின் சார்பிலும் அனைத்து தயாரிப்பாளர் களுக்கும் நன்றியை தெரிவித் துக்கொள்கிறேன்.
இவ்வாறு என்.முரளி என்கிற முரளி இராமநாராயணன் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலில் வெற்றி பெற்ற் நிர்வாகிகளுக்கு நீதியரசர் ஜெயசந்திரன் வெற்றி சான்றுகள் வழங்கினார்.

 

தலைவராக வெற்றிம் பெற்ற என்.முரளிக்கு பெப்ஸி தலைவர்  ஆர்.கே.செல்வமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.