கே பி பிலிம்ஸ் பாலு மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் அஞ்சலி

38

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் கே. பாலு நேற்று முன்தினம் மாரடைப்பில் மரணம் அடைந்தார். பிரபு-குஷ்பு நடிக்க பி வாசு இயக்கத்தில் உருவான வெற்றிப்படம் சின்னதம்பி வெற்றி படத்தை தயாரித்த துடன் விஜயகாந்த், சத்ய ராஜ், அர்ஜூன் நடித்த படம் உள்ளிட்ட 25 வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார்.
கே பாலு மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நினைவு அஞ்சலி கூட்டம் இன்று நடந்தது.
இதில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என் முரளி ராமசாமி, கே ஆர், ஏ எல் அழகப்பன்,கே முரளிதரன், டி.சிவா, சங்க செயலாளர்கள் ராதா கிருஷ்ணன், மன்னன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், அழகன் தமிழ்மணி, சிவசக்தி பாண்டியன், சித்ரா லட்சுமணன், இயக்குனர் பி .வாசு, ஆர் வி. உதயகுமார், நடிகர் எஸ் வி சேகர், அனுமோகன், நடிகர் உதயா, விஜய முரளி ஆகியோர் இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.

கே.பாலு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இது குறித்து விஷால் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார். அதை டி சிவா கூட்டத்தில் தெரிவித்தார்.
‘கே பாலுவுக்கு நான் நடிப்பதாக இருந்த படத்தின் தொடக்கவிழாவை 1ம் தேதி பூஜையுடன் தொடங்கி உள்ளேன். கண்டிப்பாக அவருக்காக அந்த படத்தை நடித்து முடித்து ஆறு மாதத்துக்குள் வெளியிட்டு அதன் லாபத்தை கே பாலு குடும்பத்தார்க்கு அளிப்பேன்’ என குறிப்பிட்டிருந்தார் விஷால்.
அஞ்சலி செலுத்தி பேசிய தயாரிப்பாளர்கள் கூறிய தாவது :
மறைந்த தயாரிப்பாளர் கே பாலு தைரியமானவர் யாருக்கும் எந்த சம்பள பாக்கியும் வைக்கமாட்டார் பேசிய தொகையை கொடுத்துவிடுவார். ஒரு படத்தை எடுப்பதற்கு முன் நன்கு திட்டமிடுவார். 20 பேரிடமாவது
தயாரிக்கப்போகும் கதையை சொல்லி கருத்து கேட்டுவிட்டு அந்த படத்தை எடுப்பார். அதனால்தான் அவரால் 25படங்களை வெற்றி படமாக எடுக்க முடிந்தது. அவருக்கு யாரிடமாவது இருந்து பணம் வரவேண்டிது இருந்தால் அதை அனைவரும் சேர்ந்து பெற்று அவர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் ‘என பலரும் குறிப்பிட்டு பேசினார்கள்.
கே பாலு உருவ படத்துக்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பாலு குடும்பத்தினர் அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Codolence meeting to film producer k.balu

Leave A Reply

Your email address will not be published.