அங்கமுத்து சண்முகம் மறைவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்

2

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி பொதுச்செயலாளர் அங்கமுத்துசண்முகம் மறைவிற்கு இரங்கல்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அங்கமுத்துசண்முகம் கலை இயக்குனர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்கும் உழைத்தவர்.
வி.சி.குகநாதனுடன் பெப்சியின் தலைவராக இருந்தபொழுது அவரின் வழிகாட்டுதலில் பொருளாளராக அவருடன் சிறப்பாக பணியாற்றி திரைப்பட தொழிலாளர்களின் பாராட்டை பெற்றவர் –

பெப்சியின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மூன்று முறை தேர்வாகி செயல்பட்டு கொண்டிருக் கிறார். அவருடன் இவரும் மூன்று முறையும் பொதுச்செயலாளராக தேர்வாகி அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று செயலாற்றி வந்தார்.

கே.ஆர்.ஆர்.கே.செல்வமணி
மனோஜ் குமார் ஆகியோர் டைரக்ட் செய்த படங்களில் தயாரிப்பாளர் களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றினார் என்பதை அந்த மூன்று இயக்குனர்களும் கூறியதுதான் அவருக்கு பெருமை.

அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், திரைப்பட தொழிலாளர்களுக்கும்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது” என அறிக்கையில் தெரிவித்துள்ளது –

Leave A Reply

Your email address will not be published.