தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

2

 

தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021)சென்னையில் நடை பெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பா ளர்கள் சங்கத்தின் செயலாளர் ராதா கிருஷ்ணன்  கூறியதாவது

திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பனை முழுக்க கணினி மயமாக் கப்பட்டு வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும், இணையத்தில் நுழைவுச் சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப் பாளர்களுக்கும் பங்கு வேண்டும், திரைப் படங்களுக்கு நடுவில் போடப்படும் விளம்பரங் களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர் களுக்கும் பங்கு, க்யூப், யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்கு விஎஃப்எஃப் எனப்படும் ஒளிபரப்புக்கருவிக்கான தவணைக் கட்டணம் கட்டமாட்டோம், உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் போட்டுள்ளோம்.

விஷால் தலைமையிலான சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தபோது இவை பேசப்பட்டன. தயாரிப் பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புப் பேச்சுவார்த் தையில் தயாரிப்பாளர்கள் முன்வைக்கப்பட்டு திரையரங்கு உரிமை யாளர்களும் ஏற்றுக் கொண்டவைதான் இவை.

முதலமைச்சர் எல்லாவற் றிலும் வெளிப்படைத் தன்மையோடு நடக்கிறார். அதேபோல இந்தத் துறையிலும் எல்லா இடங்களிலும் குறிப்பாக திரையரங்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்க அரசாங்கம் ஆவன செய்யவேண்டுமெனக் கோருகிறோம்.

திரையரங்குகளில் விற்கப்படும் நுழைவுச் சீட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் முறையான கணக்கு கொடுக்காததால் ஆண்டுக்கு பலகோடி அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த வருவாய் சரியான முறையில் அரசாங்கத்துக்குப் போய்ச்சேர்ந்தால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு மனியம் உள்ளிட்ட பல சலுகைகளை உரிமையுடன் கேட்டுப் பெற முடியும்

எனவே எங்கள் கோரிக்கையை திரையரங்குக்காரர்கள் ஏற்கவில்லையென்றால் அரசாங்கத்திடம் முறையிடவுள்ளோம்.

தனியார் நிறுவனங்கள் மூலம் திரையரங்குகள் கணினிமயமாக்கப்பட்டு முன்பதிவு மூலம் சேவைக் கட்டணம் என்கிற பெயரில் ஒரு நுழைவுச் சீட்டுக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படு கிறது.

நாங்கள் எல்லாத் தயாரிப் பாளர்களுக்காகவும்தான் பேசுகிறோம்தி. ரைப்படத் தொழிலா ளர்கள் சம்மேளனத்துடன் சம்பளம் மற்றும் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் எங்கள் சங்கம்தான் போட்டு வருகிறது. வருங்காலத் திலும் அதுவே தொடரும்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.