எல்.வி.பிரசாத் எனும் சாதனையாளர்

2

திரைப்படங்கள் என்றால் கண்டிப்பாக எல்.வி.பிரசாத்தின் பங்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடியாது. இன்னிக்கும் பெயர் பெற்று விளங்கும் பிரசாத் ஸ்டூடியோவை உருவாக்கி தமிழ் சினிமா பொருளாதாரத்தை வளர்த்தவர் எல்.வி.பிரசாத். பல ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் தயாரிப்பான ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கதாநாயகியின் தாத்தாவாக நடித்து புகழ் பெற்றவர்.

17-1-1908ல் ஆந்திராவில் பிறந்த அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் தான் எல்.வி.பிரசாத் என்னும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார்.. இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

நடிக்கும் ஆசையோடு 1930ஆம் ஆண்டு பம்பாய் சென்றவருக்கு ,,அந்த ஆசை எளிதில் நிறைவேறவில்லை.

தொடர்ந்து முயற்சி செஞ்சதில் Star of the East என்னும் மௌனப் படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது.பின்னர் 1931ல் வெளியான ஆலம் ஆரா என்னும் முதல் பேசும் படத்தில் சிறு பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

பின்னர் காளிதாஸ், பக்த பிரகலாதா ஆகிய படங்களில் நடித்தவருக்கு அலிஷா என்னும் ஹிந்திப் பட இயக்குநரிடம் உதவி இயக்குநர் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. எட்டு ஆண்டு காலம் உதவி இயக்குநர் ஆகியும் , ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

1949ல் இயக்குநர் ஆகும் ஆசை நிறைவேறியது.’மனதேசம்’ என்னும் தெலுங்கு படத்தை இயக்கினார்.என்.டி.ராமராவ் இப்படத்தில் தான் அறிமுகமா னார்.1950ல் விஜயா பிக்சர்ஸ் சார்பில் ‘சாவுகாடு’ படம் இயக்கி னார்…

பின்னர் சம்சாரம், மனோகரா (தமிழ்,தெலுங்கு,ஹிந்தி),ராணி (ஹிந்தி) ஆகிய படங்கள் இவரை பிரபல இயக்குநராக ஆக்கின.

1956ல் பிரசாத் ஸ்டூடியோ உருவானது..பின்னர் சில காலம் நோய்வாய்ப் பட்டார்.

பின்னர் 1956ல் பிரசாத் புரடக்சன்ஸ் உருவாக்கினார்.அவர் தயாரிப்பில் மிலன்,கிலோனா,சசுரால்,ஏக் துஜே கேலியே ஆகிய மாபெரும் வெற்றி படங்கள் உருவாயின.

நடிகர்,உதவி இயக்குனர், தயாரிப்பாளராய் இருந்த துடன்..இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மும்மொழியிலும் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்..மனோகரா, மிஸ்ஸியம்மா, கல்யாணம் பண்ணிப் பார், பூங்கோதை, கடன் வாங்கிக் கல்யாணம், மிஸ் மேரி, மங்கையர் திலகம், தாயில்லாப் பிள்ளை (கலைஞர்..கதை,வசனம்),இருவர் உள்ளம் (கலைஞர்..கதை, வசனம்)ஆகியவை.

மூன்று மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 35 படங்களை இயக்கி யுள்ளார்.

ஹைதராபாத்தில் கண் மருத்துவ மனைக்கு பல ஏக்கர்கள் இடத்தை அளித்தவர் இவர். இந்திய அரசின்’தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றவர்.

Leave A Reply

Your email address will not be published.