பஞ்சு அருணாசலம் நினைவு தினக் கட்டுரை

2

 

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலி யை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையா சிரியராக, வசனகர்த்தா வாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர்.
திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கும் ‛‛மணமகளே மருமகளே…”இவர் முதன் முதலில் பாட்டு எழுதியது 1960-ல் வெளிவந்த ‛நானும் மனிதன் தான்’, 1961-ல் கண்ணதாசனின் அண்ணன் தயாரிப்பில் வெளிவந்த ‛சாரதா’ படத்தில் கேவி மகாதேவன் இசையில் வெளிவந்த ‛‛மணமகளே மருமகளே வா வா…” பாடல் இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. எம்ஜிஆருக்கு ‛பட்டுக் கோட்டை’ கல்யாண சுந்தரம் ஸ்டைலில் பாட்டெழுதியவர்எம்ஜிஆருக்காக இவர் எழுதிய முதல் பாடல் ‛கன்னித்தாய்’ படம். கேளம்மா சின்னப் பொண்ணு கேளம்மா என்று கட்டட தொழிலாளர் களின் நிலையை எடுத்து சொல்வது போன்று எழுதியிருப்பார். ஏழைக் குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறாய் ஓடணும் என்று எழுதியிருப்பார். எம்ஜிஆருக்கு ‛பட்டுக் கோட்டை’ கல்யாண சுந்தரம் ஸ்டைலில் பாட்டெழுதியவர் இவர். கலங்கரை விளக்கம் பாடல் முழுக்க இவர் எழுதியது தான். இப்படத்தில் இடம்பெற்ற ‛பொன் எழில் பூத்தது புதுவானில்…’, ‛என்னை மறந்தது ஏன் தென்றலே…’, உள்ளிட்ட எல்லா பாடல் களும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.
முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியவர் எம்.ஜி.ஆரை தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியிருக் கிறார். சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியிருக்கி றார்.இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம் தான். அந்தப்படத்தில் இடம் பெற்ற ‛‛மச்சானை பார்த்தீங்களா…” பாடல் இவர் எழுதி, இளையராஜா இசையமைத்தது தான். இந்தப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து சூப்பர் ஹிட்டானது. பஞ்சு அருணாசலத்தின் மறைவு தமிழ் திரையுலகுக்கு இன்றளவும் பேரிழப் பாகும்.

Leave A Reply

Your email address will not be published.