இசை நிறுவனம் தொடங்கியுள்ள சுந்தர் சி-19 தயாரிப்பாளர்,..

0

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் 19-வது திரைப்படத்தை தயாரிக்கும் வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி, வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

ஷீரடி சாய்பாபா மீதான இந்த பாடலை பிரபல பாடகி சாதனா சர்கம் பாடியுள்ளார். ஜெகனின் வரிகளுக்கு விக்னேஷ்வர் கல்யாணராமன் பக்தி மணம் கமழ இசை அமைத்துள்ளார். இந்தி பதிப்பின் பாடல்வரிகளை ரிஷிகேஷ் பாதக் இயற்றியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சேவைகள், கட்டுமானம், மின்னணு மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே தடம் பதித்துள்ள வி ஆர் டெல்லா, வி ஆர் மணிகண்டராமன் ராமபத்ரன் தலைமையில் இயங்கி வருகிறது.

புதிய இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே வோனி மியூசிக் தொடங்கியிருப்பதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

சமீபத்தில் இந்நிறுவனம் தொடங்கிய வேயப் எனும் செயலி மூலம் இளம் பாடகர்களுக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டு, அதில் தேர்வான மாலிக் பாஷா மற்றும் பூஜா ஸ்ரீ ஆகிய இருவர், முதல் பரிசான ரூ 5 லட்சத்தை சரிசமமாக பகிர்ந்து கொண்டதோடு, சுந்தர் சி நடிக்கும் படத்தில் சந்தோஷ் தயாநிதி இசையில் பாடியும் உள்ளனர். பாடகர்களுக்கு மட்டுமில்லாது, இளம் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இவ்வாறு வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

“எங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பாடல்களை வெளியிடுவதோடு, மற்ற திரைப்படங்களின் ஆடியோவையும் நாங்கள் வெளியிடுவோம்,” என்று வி ஆர் மணிகண்டராமன் ராமபத்ரன் தெரிவித்தார். சாய் பாபா பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சுந்தர் சி-19 திரைப்படம் பற்றி பேசுகையில், “கட்டப்பாவ காணோம் புகழ் மணி சேயோன் இந்த படத்தை இயக்குகிறார். தான்யா ஹோப் மற்றும் ஹெபா படேல் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை உள்ளிட்டவை விரைவில் வெளியிடப்படும்,” என்று தயாரிப்பாளர் தெரிவித்தார். மேலும் சில படங்களும் திட்டமிடப்பட்டு வருவதாக அவர் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.