தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசகர் இயக்குனார் ஆகிறார்

17

ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின், சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிக்கும் ‘மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்’ படத்தை இயக்குகிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்
லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்த்தி அதிபர் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்டக்கதை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘முருங்கக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார்.
இவற்றுடன் கார்த்திக் சுப்பு ராஜின் அசோசியேட் விஜய ராஜ் இயக்கத்தில் பரத், மிர்சி செந்தில், கரு.பழனியப்பன், விஜய் டிவி அசார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் ‘முன்னறி வான்’ படத்தை தயாரித்து வருகிறார்.
‘மிக மிக அவசரம்’, ‘கூர்கா’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ளார். அந்த வரிசை யில் ‘அதோ அந்தப் பறவை போல’ படம் விநியோகத் துக்கு தயாராக உள்ளது.
தற்போது, இவர் ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமா கிறார். இப்படத்திற்கு ‘மார்க் கண்டேயனும் மகளிர் கல்லூரி யும்’ எனப் பெயரிடப்பட் டுள்ளது.
படத்தில் கதாநாயகன் பெயர் மார்க்கண்டேயன். கதைப்படி இவர் பெரும் பணக்காரர். படத்தின் முதல்பாதியில் இவர் லண்டன், ஜெர்மனி, நியூசிலாந்து நாடுகளில் மார்க் என்ற பெயரில் உலா வருகி றார். பின்னர், இவருக்கு இந்தி யாவில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெறும் போட்டி யில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு கிறது. அந்தப் போட்டியில் பங்கேற்க 5 நிபந்தனைகள் இருக்கின்றன. மார்க்கண்டேயன் என்ற தனது உண்மையான முழுப்பெயரு டன் தாயகம் திரும்பும் கதா நாயகன் போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? அவர் போட்டியில் பங்கேற்றாரா, வெற்றி பெற்றாரா என்ற கதைகளம் நகைச்சுவைப் பின்னணியுடன் ஜனரஞ்சக மான படமாக உருவாக விருக்கிறது.
சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிக்கும் இப்படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார் ரவீந்தர் சந்திர சேகரன்.
படத் தயாரிப்பாளர்கள் சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை ஏற்கெனவே ‘முருங் க்காய் சிப்ஸ்’ என்ற திரைப் டத்தின் இணை தயாரிப்பாளர் ளாக இருந்துள்ளனர்.
அதிரடி, ஆர்ப்பாட்டம் என்றில்லாமல் நல்ல ஆழ ன கதைக்கருவுடன் அழுத்த னப் படங்களைக் கொடுத்தால் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலம் நிலைத்திருக்கலாம் என்ற புரிதல், நம்பிக்கையுடன் முழுநேர தயாரிப்பில் இறங்கு ன்றனர் இந்த இரட்டைத் தயாரிப்பாளர்கள்.
இயக்குநர் ரவீந்தர் சந்தி சேகரனுக்கு திரைக்களத்தில் இது ஐந்தாவது அவதாரம் என்றே சொல்ல வேண்டும். விநியோகிஸ்தர், 9 திரைப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் என்று அறியப் பட்டவர் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் ஒரு பாட லையும் எழுதினார். சித் ஸ்ரீராம் குரலில், தரண் இசை யில் பதிவான அந்தப் பாடல் இன்றளவும் யூடியூபில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் ஆதர வைப் பெற்றுவருகிறது. பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டும். வார்த்தைப் பிரயோகத்தை சரியாகச் செய் வதன் மூலம் நாம் ரசிகர் களுக்குச் சொல்லவேண்டிய கருத்தை சரியாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை தனது எழுத்தால் நிரூபித் திருக்கிறார். 4-வதாக அவர் ஓர் யூடியூப் பிரபலம். ஃபேட் மேன் (FATMAN) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி மக்களுக்கு அறிமுக மானவர். ஏற்கனெவே திரைத் துறையுடன் ஒன்றிய 4 தளங் களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இப்போது புதிய பரிமாணத்தில் இயக்குநராக அவதரித்திருக்கிறார்.
இப்படத்தில் நாயகனாக முன்ன்னி கதாநாயகன் நடிக்க உள்ளார் ஒளிப்பதிவாளராக முன்னணி கலைஞரை ஒப்பந் தமாகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தைப் பொங்கல் நாளன்று வெளியிடப்படுகிறது.
இப்படத்தில் முதன்முறை யாக, பிரியா மாலி என்ற பாடகி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கு நிர்மல் எடிட்டிங் செய்கிறார். கலை, நர்மதா வேணி. காஸ்ட்யூம் டிசைனராக ஹீனா பணியாற்றுகிறார். ஸ்டேஜ் புகைப்படக்காரராக ராஜா, டிசைனராக சந்துரு பணியாற்றுகின்றனர். பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல் படுகிறார்.
பெரும் பொருட்செலவில் தயாராகும் ‘மார்க்கண் டேயனும் மகளிர் கல்லூரியும்’ படத்தின் படப்பிடிப்பு சித்திரை வருடப்பிறப்பை ஒட்டி தொடங்குகிறது.
இப்படத்தின் முதல்பாதி நியூசிலாந்து, லண்டன், ஜெர்மனியிலும், இரண்டாம் பகுதி தமிழகத்திலும் படமாக்கத் திட்டமிடப்பட் டுள்ளது.
மேலும், இத்திரைப்படம் ஒரு குடும்பப் படமாக அதே நேரத்தில் கமர்ஷியல் படமாக வும், பெண்களைக் கவரும் படமாகவும் இருக்கும் என படக்குழுத் தரப்பில் கூறப்படுகிறது.
Libra Productions Ravindhar Chandrasekaran debuts as Director
Producer Ravindhar, Markandeyanum Magalir Kallooriyum’, தயாரிப்பாளர் இயக்குனர் ஆனார்,

Leave A Reply

Your email address will not be published.