படம்: புலிக்குத்தி பாண்டி
நடிப்பு: விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், ஆர்.கே.சுரேஷ். வேலா ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், ஆடுகளம் நரேன், சுஜாதா சிவகுமார், நமோ நாராயாணா, மாரிமுத்து,
தயாரிப்பு: கலாநிதி மாறன், எம்.முத்தையா
இசை: என்.ஆர்.ரகுநந்தன்,
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்
இயக்கம்: எம்.முத்தையா
ரிலீஸ்; சன் டிவி (15.1.2021)
சூரக்கோட்டையை சேர்ந்த புலிக்குத்தி பாண்டி யார் தப்பு செய்தாலும் தட்டிக்கேட்கி றான். ரவுடிகளுக்கு உடந்தை யாக இருக்கும் இருந்த இன்ஸ்பெக்டரையே அடித்து துவம்சம் செய்கிறான். இந்த வழக்கில் கைதாகி வரும் பாண்டி அங்கு மகளுக்காக ரவுடியை கத்தியால் குத்திய பெரியவரை சந்திக்கிறார். மகளின் மானத்தை காக்க ரவுடியை குத்தியதாக அந்த பெரியவர் சொல்ல அவர் மீது இரக்கம் கொள்கிறான் பாண்டி. பெரியவரின் மகள் லட்சுமி மேனனை பார்த்ததும் அவர் மீது காதல் கொள் கிறான். ஒரு வழியாக பாண்டி யின் காதல், கல்யாணத்தில் முடிகிறது. ஊர் அடிதடிக்கு செல்லாமல் வெல்லம் வியா பாரத்தில் ஈடுபடுகிறார். இதற் கிடையில் அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் வேலா ராம மூர்த்தி பணம் தராதவர்களை அடியாட்களை வைத்து அடிக் கிறார். பெரியவரின் மகன்கள் வாங்கிய கடனுக்கு அவரை இழுத்துச் செல்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று வேலா ராம மூர்த்தி கூற தனது இரண்டு வீடுகளில் ஒரு வீட்டை எழுதி தந்து பெரியவரை அவரிடமி ருந்து காப்பாற்றுகிறான் பாண்டி. வேலா ராமமூர்த்தி அந்த வீட்டில் தனது வைப்பாட்டியை குடிவைக் கிறார். லட்சுமி மேனன் மீது வேலா ராமமூர்த்தி ஆசைப் படுகிறார். வைப்பாட்டி மூல மாக தூது விடுகிறார். இதை யறிந்து கோபம் அடையும் லட்சுமி மேனன், வேலா ராமமுர்த்தியின் வைப்பாட்டி யை அடித்து விரட்டுகிறார். ஒருசமயம் லட்சுமி மேனன் வீட்டுக்குள் வேலா ராம மூர்த்தி நுழைந்து விட அவரை அடித்து விரட்டுகிறார் லட்சுமி மேனன். அப்போதுவரும் விக்ரம் பிரபு வேலாவை போலீசில் ஒப்படைத்து புகார் செய்கிறார். இதில் வேலாவின் ஆட்கள் சமாதானம் பேசுகி றார்கள். புகாரை வாபஸ் வாங்கினால் ஏற்கனவே வாங் கிய வீட்டை திருப்பி தந்து விடுவதாக கூறுகிறார்கள். புகாரை வாபஸ் பெறுகிறார் விக்ரம் பிரபு. அதன் பிறகு நடப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அமைகிறது.
கும்கி ஜோடி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மீண்டும் இப்படத்தில் இணைந்திருக் கிறது. புலிக்குத்தி பாண்டியாக ரகளை செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. இதுவரை பார்க் காத துடிப்பும் வேகமும் விக்ரம்பிரபுவை வித்தியாசப் படுத்தி காட்டுகிறது. நடனத் திலும் சும்மா கிழி கிழிதான்.
’நல்லவன அடிக்க மாட்டேன் நல்லவனுக்காக அடிப்பேன்’ என்று பஞ்ச் வசனம்பேசி இன்ஸ்பெக்டரை வெளுப் பதும், லட்சுமி மேனனை துரத்தி வரும் ரவுடிகளை பாய்ந்து தாக்குவதுமாக ஆக்ஷன் காட்சிகளில் அட்ட காசம் செய்திருக்கிறார்.
லட்சுமி மேனனை திருமணம் செய்தபிறகு தனது அடிதடி களை குறைத்துக் கொண்டு வெல்லம் தயாரிக்க தோட்டத் துக்கு சென்றுவிட்டு சாந்த சொரூபியாகிவிடுகிறார்.
லட்சுமி மேனன் நீண்ட நாட் களுக்கு பிறகு தமிழில் தலை காட்டுகிறார். கிராமத்து பெண் வேடம் என்றதும் கூப்பிடு லட்சுமி மேனனை என்று சொல்லும் அளவுக்கு வேடத் துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சண்டியரை கட்டிக்க மாட்டேன் என்று விக்ரம் பிரபுவிடம் சொல்லி விட்டு, கட்டினால் அவரைத் தான் கட்டுவேன் என்று தோழி களிடம் சொல்லும்போது விக்ரம்பிரபு மீதான காதலை வெளிப் படுத்துகிறார்.
வேலா ராமமூர்த்தியின் ரவுடித் தனத்தில் முரட்டுத்தனம் அதிகம் அவரது மகனாக வரும் ஆர்.கே.சுரேஷ் ஒரு பெரிய விஷயத்தை செய்து அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். சமுத்திரக்கனி தோழாராக வந்து ஊர் ஊருக்கு சென்று புரட்சி பாடல்கள் பாடுகிறார். சிங்கம் புலி கோஷ்டி சிரிக்க வைக்கிறது.
குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற மாறுபட்ட படங் களை இயக்க்கிய முத்தையா இயக்கி இருக்கிறார். உறவே இல்லாமல் தனி ஆளாக வரும் விக்ரம்பிரபுவுக்கு மனைவி மூலமாக மாமனார், அக்கா, மச்சான் என உறவுகளை உண்டாக்கித்தரும் இயக்குனர் கிளைமாக்ஸை இப்படியொரு அதிர்ச்சியாக தருவார் என்று எதிர்பார்க்க முடியவில்லை.
என்.ஆர்.ரகுநந்தன் இசை காட்சிகளுக்குள் கட்டுப்பட்டி ருக்கிறது. ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்திற்கான சூழலை கடைசிவரை தக்க வைத்திருக்கிறது.
புலிக்குத்தி பாண்டி- எதிர்பாராதது.