இராம.அரங்கண்ணல் பிறந்த தினம் இன்று

9

இராம.அரங்கண்ணல், தஞ்சை மாவட்டம், கோமல் என்னும் ஊரில், ராமகிருஷ்ணன் — ருக்மணி தம்பதிக்கு மகனாக, இதே மார்ச், 3ல், பிறந்தார். 1949ல், திராவிடர் கழகத்திலிருந்து, அண்ணாதுரை வெளியேறி, திராவிட முன்னேற்ற கழகத்தைத் துவக்கினார். அப்போது அவரை ஆதரித்த, முக்கிய தலைவர்களுள், அரங்கண்ணலும் ஒருவர். 1950 – 6௦ இடைப்பட்ட காலங்களில், இவர் எழுதிய கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. அவற்றிற்கு, திரைக்கதை, வசனம் எழுதினார்.

செந்தாமரை, மகனே கேள், பொன்னு விளையும் பூமி, பச்சை விளக்கு மற்றும் அனுபவி ராஜா அனுபவி போன்ற தமிழ் படங்களை தயாரித்தார். தமிழக எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர்.மூன்று முறை தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தார். அவரது எழுத்து படைப்புகளை, ௨௦௦௭ – ௦௮ல், தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. கலைமாமணி விருது பெற்றவர். அவர் பிறந்த தினம், இன்று.

Leave A Reply

Your email address will not be published.