ராதா கிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படம் ’ஜெ’

18

ஜெ ( J A MYSTIC) என்ற புதிய திரைப்படத்தை  தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளர் சங்கத் தேர்தலில் பெருவெற்றி  பெற்று தயாரிப்பாளர்.சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ராதாகிருஷ்ணன்  மாருதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் 6 வது தயாரிப்பாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.. ஞானசேகர்..( TOUCH SCEEN ENTERTAINENT) எம்.எஸ். முரளி.. (ஓம் ஷீரி சாய் இன்வென்ஷன்ஸ்) .. இணைதயாரிப்பாளார்களாக இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள்
மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவுள்ள இத்திரைப்படத்தில் கிஷோர்(பொல்லாதவன்) ஹாரிஷ் பெராடே( மெர்சல்) இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க.. பொம்மு லக்‌ஷ்மி, நேகா, மற்றும் பலர் நடிக்கின்றனர்..
விலங்குகளும் பங்கேற்க உள்ள இத்திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக உள்ளது..
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் இயக்கவுள்ளார்.
பாலா ஒளிப்பதிவில்,  எல்.வி.கணேஷ் இசையில், கலை இயக்கத்தை முருகன் ஏற்றுள்ளார். இப்படக் குழுவினர் அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இரண்டாம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடும் பணியில் படக்குழு விறுவிறுப்பாக செயல் பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படம் திரில்லர் பாணியில் வெளிவரவிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது.
மேலும் இத்திரைப்படம் புது விதமான அனுபவத்தை நிச்சயமாக தரும் என திரைப்படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.