தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.. ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

17

சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று டிவிட்டரில் வெளியிட்ட மெசேஜில்.’ வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க போவதாகவும் அதற்கான தேதி டிசம்பர் மாதம் 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.ரஜினியின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

பின்னர்  சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்  ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன்.

எனது கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன்.

நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லாத சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது பொருத்தமான தருணம் என- துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறி உள்ளார்..

 

Leave A Reply

Your email address will not be published.