ரஜினியை அரசியலில் ஈடுபட கேட்க, நடிகர் லாரன்சிடம் முறையிடும் ரசிகர்கள்

22

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து அவரை அஎரசியலில் ஈடுபட வற்புறுத்து ரசிகர்கள் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் ரஜினி, ’அரசியலுக்கு வரச் சொல்லி என்னை வற்புறுத்தாதீர்கள்’ என்று அறிக்கை வெளியிட்டார்.  இதையடுத்து ரஜினி ரசிகர்கள் நடிகர் லாரன்சிடம் சென்று ரஜினியை அரசியலில் ஈடுபட கேட்கும்படி கோரிக்கை வைக்கின்றனர்.

இதுபற்றி ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பலர் என்னிடம் வந்து வள்ளு வர் கோட்டம் அருகே நடக் கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். சாய் ரமணி மூலமாக சில குரல் பதிவு களும் எனக்கு வந்தது. தலைவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்கச் சொல்லி பலர் என்னிடம் கூறுகிறார்கள். அதனால்தான் இந்த அறிக் கையை விடுக்கிறேன். தலை வர் வேறு எந்தகாரணம் சொல்லி இருந்தாலும் நாம் அவரிடம் கோரலாம் ஆனால் அவர் உடல்நிலையை முக்கிய காரணமாக கூறுகிறார். நாம் அவரிடம் கோரிக்கை வைத்து தன் முடிவை மாற்றிக் கொண்டு அதனால் அவருக்கு ஏதாவது நடந்தால் நாம் குற்ற வுணர்வுடன் வாழ்நாள் முழு வதும் வாழ வேண்டி இருக் கும். அவர் அரசியலுக்கு வரா விட்டாலும் என்றைக்கும் எனக்கு அவர்தான் குரு. அவருடன் நெருக்கமாக பேசு வதால் அவர் உடைநிலை பற்றி எனக்கு தெரியும், இப்போதைய தேவையெல் லாம் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அமைதி யாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டி யதுதான். என்னுடைய பிரார்த்தனையில் அவர் எப்போதும் இருக்கிறார். குருவே சரணம்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.