சூப்பர் ஸ்டார் ரஜினி, மன்ற நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை..

அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிக்கிறார்..

13

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2017ம் இதற்கு பதில் அளித்த ரஜினி , ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி சட்டமன்ற தேர்தலில் தனிக்ட்ட்சி தொடங்கி  234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’’ என்று அறிவித்திருந்தார்.  அதன்பிறகு கடந்த 2 வருடமாக கட்சி தொடங்காமல் அரசியல் கருத்துக்கள் மட்டும் தெரிவித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு நெட்டில் ரஜினி  பெயரில் ஒரு அறிக்கை வந்தது. அதில் தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால்,  அரசியல் நிலைப்படு குறித்து விரவில் அறிவிபேன் என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கடித்தத்தில் ‘‘என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாடு பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை ரஜினி கூட்டி உள்ளார். இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்துவிட்டனர். பின்னர் ரஜினியும் வந்து சேர்ந்தார். இந்த கூட்டத்தில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதில் அரசியல் குறித்து ரஜினி முக்கிய முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.