மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதி

1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். பிறகு ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் . அங்கிருந்து சென்னை திரும்பினார்.

இந்நிலையில் ரஜினி காந்த் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக கூறப்படு கிறது. ரஜினியை அவரது குடும்பத்தினர் அருகிலி ருந்து கவனித்து வருகின் றனர். நடிகர் ஒய் ஜி.மகேந் திரன் நேரில் சென்று ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் கூறும்போது,’ ரஜினி நலமுடன் இருக்கிறார். அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதற்கு முன் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்புவார்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.