ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

விரைந்து குணம் அடைய கவர்னர்- முன்னாள் முதல்வர் - நடிகர் வாழ்த்து

17

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றார். படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு கொரோன டெஸ்ட் எடுக்கப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது. அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு இன்று ரத்த அழுத்தம் ஏற்பட்டது. உடனடியாக ஐதராப்பாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமை வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்த் இன்று மருத்துவமன்யில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாமலிருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ஆக இருந்தது. அவர்து உடல்நிலை தற்போது சீராக உள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.

ரஜினிகாந்த் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று ஆந்திர மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர்  சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

பிரபல நடிகர் பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் .ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத் தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரஜினிகாந்த் நிறைந்த தைரியமுள்ளவர், அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார்.
அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜி யின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இவ்வாறு பவன் கல்யாண் கூறி உள்ளார்

Leave A Reply

Your email address will not be published.