ரஜினிகாந்த் இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

ஒரு மாதம் ஓய்வுக்கு பிறகு இந்தியா திரும்புகிறார்

1
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.சிறுத்தை சிவா இயக்கும்  இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தாலும் கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு தடை பட்டது.
கடந்த ஆண்டு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது ஷுட்டிங்கில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ர்ஜினிகாந்தும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த ரஜினிகாந்த் சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் இதில் எடுத்து முடிக்கப்பட்டன.
இப்படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தரா கீர்த்தி சுரேஷ். பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டப்பின் பணியை ரஜினிகாந்த் விரைந்து முடித்து வரும் தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை பரிசோதனை,  உயர் சிகிச்சை எடுக்க எண்ணினார். அமெரிக்கா சென்று அதற்கான சிகிச்சை பெற முடிவு செய்தார். கொரோனா காலகட்டம் என்பதால் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தார். அந்த அனுமதி கிடைத்தது.
ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் ஏற்கனவே ஹாலிவுட் படப்பிடிப்புக்காக  அமெரிக்காவில் தங்கி இருக்கிறார்.  அவருடன் ஐஸ்வர்யா தனுஷும் தங்கி உள்ளார். அவர்கள் ரஜினியை உடனிருந்து  கவனித்து கொள்வார்கள் .
ஒரு மாத சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு  ரஜினிகாந்த், ஜூலை 8-ஆம் தேதி இந்தியா திரும்ப உள்ளார். வந்தவுடன் அண்ணாத்த படத்தின் டப்பிங்கை முடித்துகொடுக்க உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.