அண்ணாத்த பாடல் பாடிய எஸ். பி. பி யை எண்ணி ரஜினிகாந்த் உருக்கம்

"இது தான் அவர் பாடும் கடைசி பாடல் என்று தெரியாது"

1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்துக்காக  “அண்ணாத்த அண்ணாத்த” என்று பாடல் பாடியுள்ளார் எஸ். பி. பாலசுப்ரமணியம். இப்பாடல் இன்று இணைய தளத்தில் வெளியானது. இதற்கிடையில் எஸ் பி.பாலசுப்ரமணியம்  கடந்த 2020ம் அண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

ரஜினியின் ஆரம்ப கால படங்கள் தொட்டு அவருக்காக எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்கள் பாடி வந்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் அண்ணாத்த படத்திலும்  ரஜினிக்காக ”அண்ணாத்த அண்ணாத்த” என்ற பாடல் பாடினார். இந்நிலையில் இப்பாடல் இன்று வெளியானது. இந்த நேரத்தில் எஸ்பி பியின் மறைவை  எண்ணி  ரஜினிகாந்த் உருக்கமான மெசேஜ் வெளியிட்டார். ”’45 வருடமாக என் குரலாக வாழ்ந்த எஸ் பி பி   இதுதான் எனக்கு பாடும் கடைசி பாடல் என்று கனவில் கூட நினைக்கவில்லை’” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட் டுள்ள மெசேஜ்:

Leave A Reply

Your email address will not be published.