தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமண விழாவில் ரஜினி, கமல் வாழ்த்து

2

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர்  அன்புசெழியன். இவரது மகள் சுஷ்மிதா MBA -ஆர். சரண் திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை  சென்னை திருவான்யூரில் உள்ள  திருமண மண்டபத்தில் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

 

மணமக்கள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்களுடன், அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, டிடிவி.தினகரன், எஸ்.வி.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, விவி. ராஜன் செல்லப்பா, ஆர்.பி. உதயகுமார், வானதி சீனிவாசன், செல்லூர் ராஜு, எஸ்பி. வேலுமணி, ஜெயக்குமார், எல் கே சுதீஷ், ஆகியோர்.. நேரில் ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.