வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

1

இரண்டு தினங்களுக்கு முன் சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப் பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக கடந்த 28ம் தேதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பிறகு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி  ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். அவருக்கு வாசலில் லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.கா

பிறகு ரஜினிகாந்த்  வெளியிட்ட ஆடியோவில், “நான் நலமாக இருக்கி றேன். மருத்துவமனை யிலிருந்து இன்று இரவு வீடு திரும்பினேன். நான் குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்தவர் களுக்கும், என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டிருக் கிறார் 

Leave A Reply

Your email address will not be published.