அமெரிக்கா சென்று திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் உலகநாயகன் கமல் ஹாசனுக்கு கோவிட்.19 பாசிடிவ் கண்டறியப் பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் . அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவனையில் அனுமதியாகியுள்ள கமல்ஹாசனை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்து விரைந்து குணம் அடைய வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் கமல்ஹாசன் பூரண குணம் பெற்று நலமுடன் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்று எஸ்.பி. முத்துராமன், பிரபு, ஆர்.சரத்குமார், சந்தான பாரதி, ஐசரி கணேஷ், ஏ.சி.சண்முகம், ராதாரவி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, பகத் பாசில், சைதை துரைசாமி, ஞான சம்பந்தன், ராஜேஷ், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், விஜய்டிவி குட்டி, ராம் குமார் – சிவாஜி பிலிம்ஸ், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்