ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’

விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்

1

 

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’ திரைப்படத்தை ஹொம் பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

“ரக்‌ஷித் ஷெட்டியுடன் எங்களின் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ‘ரிச்சர்ட் அந்தோணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரக்‌ஷித் தான் இயக்குநர். ஹீரோவா கவும் நடிக்கிறார். ரக்‌ஷித் ஷெட்டியைப் பற்றி சொல்ல வேண்டுமென் றால் அவரின் நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறியுள்ளது. சினிமாத் துறையில் அவரின் வளர்ச்சி அபரிமிதமானது. அடிமட்டத்திலிருந்து தனது படைப்பாற்றலாலும் அர்ப்பணிப்பாலும் இந்த உயரத்தை அவர் எட்டியுள் ளார். எங்களின் ஹொம் பாலே ஃபிலிம்ஸின் 10வது படத்தில் ரக்‌ஷித் ஷெட்டியுடன் கைகோர்ப் பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்தப் படம் புத்துணர்ச்சியூட்டும் படமாக இருக்கும். நிமிடத்துக்கு நிமிடம் அடுக்கடுக்கான மர்மங்கள் நிறைந்த திரைப்படம். இந்தப் படத்தின் தயாரிப்பு 2022ல் தொடங்கும். இந்தப் படத்தின் மூலம் உங்கள் அனைவரையும் குதூகலிக்கச் செய்யும்” என்று தயாரிப்பாளர் திரு. விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.

படத்தைப் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி கூறும்போது, “ரிச்சர்ட் அந்தோணி உலிடவரு கண்டந்தி” எனும் திரைப்படத்தின் அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், இது அதைவிடவும் இன்னும் சுவாரஸ்ய மானது பிரம்மாண்ட மானது. பல ஆண்டு களுக்கு முன்னர் நான் உலிடவரு கண்டந்தி எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பதுபோல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டி ருக்கும் போல. இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்த போது அதை நான் வடித்தி ருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கி றேன். இதன் அடுத்தக் கட்டத்தையும் நான் எழுது வேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன்.
ஹொம்பாலே நிறுவனத்துடன் இணைந் திருப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். எங்களின் நட்பு என்றென்றும் தொடரும் என ஆழமாக நம்புகிறேன என்று கூறியுள்ளார்.

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தத் திரைப் படத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது. நாங்கள் பத்தாவது திரைப்படம் என்ற மைல்கல்லை எட்டியிருக் கிறோம். படத்தின் பெயர் ‘ரிச்சர்ட் அந்தோணி’, லார்ட் ஆஃப் தி ஸீ. இந்தப் படத்தை ரக்‌ஷித் ஷெட்டி இயக்கி நடிக்கிறார். படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசைய மைத்துள்ளார். கார்ம் சாவ்லா ஒளிப்பதி வாளராக ஒப்பந்தமாகி யுள்ளார். படத்தின் படப் பிடிப்பு ஜனவரி 2022ல் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக் கிறோம்.

–> http://youtu.be/d7B5dhz4_o4

Leave A Reply

Your email address will not be published.