கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து

நவீன் தமிழகம் உருவாக வலுவான குரல் தருகிறார்

13

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் 66வது  பிறந்த நாளை அவரது தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  அவருக்கு அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 

முன்னதாக காலையில் கட்சி அலுவலகத்துக்கு வந்த கமல்ஹாசனுக்கு தொண்டர்கள் திரண்டு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்ததனர். அதுபற்றி சிறப்பு வீடியோவை மநீம கட்டி வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து பாடியிருக்கும் பாடலும் இடம் பெற்றுள்ளது.

கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பினர் பிறந்தா நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தற்போதைய நாடாளுமன்ற எம்பி  ராகுல் காந்தி  கமல்ஹாசனுக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதில்.’ கமல்ஹாசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நவீன தமிழகம் உருவாக வலுவான குரல் கொடுத்து வருகிறார்’ என பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.