செவாலியே நடிகர் திலகம் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த். இருவரும் சினிமாவில் நடித்திருப்பதுடன் பட தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
அறுவடை நாள், மை டியர் மார்த்தாண்டன், சந்திரமுகி (சிறப்பு தோற்றம்), ஐ, எல் கே ஜி, பூமராங் போன்ற படங் களில் நடித்திருக்கும் ராம் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த சந்திரமுகி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த கலைஞன், தல அஜித் நடித்த அசல் ஆகிய படங் களை தயாரித்திருக்கிறார். ராம்குமார் மகனும் சிவாஜி பேரனுமான துஷ்யந்த் சக்சஸ், மச்சி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளதுடன் நடிகர் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சவேரி, பூஜா குமார் நடித்த மீன் குழம்பும் மண் பா
னையும் மற்றும் ஜகஜால கில்லாடி ஆகிய படங்களை தயாரித்தி ருக்கிறார்.
ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் இருவரும் தி.நகரில் உள்ள சிவாஜி வீட்டிலிருந்து தொண்டர்கள் புடை சூழ, அதே பகுதியில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். மேளதாளம் முழங்க அனைவரும் பா ஜ அலுவலகத்தை அடைந்தனர்.
அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்.
முன்னதாக தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்த ராம்குமார் மற்றும் அவரது மகனும், நடிகருமான துஷ்யந்தும் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினர். பின்னர் ராம்குமார் கூறும்போது, ‘நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளேன். அதற்கு வலிமை யான மனிதர் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். பா.ஜ.க.வில் இணைந்து மக்களுக்கு நல்லது செய்வேன்.’ என தெரிவித்தார்.