சிவாஜி மூத்த மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் பா ஜ கட்சியில் நாளை இணைகின்றனர்
ரசிகர்கள் - தொண்டர்கள் புடை சூழ செல்கின்றனர்..
லட்சசோப லட்சம் ரசிகர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி. இவரது மூத்தமகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த். இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்திருப்பது டன் பட தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
அறுவடை நாள், மை டியர் மார்த்தாண்டன், சந்திரமுகி (சிறப்பு தோற்றம்), ஐ, எல் கே ஜி, பூமராங் போன்ற படங் களில் நடித்திருக்கும் ராம்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த கலைஞன், தல அஜித் நடித்த அசல் ஆகிய படங் களை தயாரித்திருக்கிறார். ராம்குமார் மகனும் சிவாஜி பேரனுமான துஷ்யந்த் சக்சஸ், மச்சி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளதுடன் நடிகர் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சவேரி, பூஜா குமார் நடித்த மீன் குழம்பும் மண் பானையும் மற்றும் ஜகஜால கில்லாடி ஆகிய படங்களை தயாரித்தி ருக்கிறார்.
பாரம்பரியம் மிக்க குடும்பத் தை சேர்ந்த ராம்குமார், அவரது மகன் துஷ்யந்த் இருவரும் நாளை மாலை 4 மணி அளவில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் புடை சூழ சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜ அலுவலகத் துக்கு சென்று மாநில பா ஜ தலைவர் முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி இணைகின்றனர்.