ஆர்.சி.சக்தி, காலமான நாளின்று.

6

ஆர்.சி.சக்தி. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் திரைத் துறையில் நாட்டம் கொண்டிருந்தார்.சுப்பு ஆறுமுகம் நடத்திய வில்லுப்பாட்டு குழுவில் சேர்ந்தார். பின்னர் அன்னை வேளாங்கண்ணி படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

1972-ம் ஆண்டு கமல்ஹாசனை வைத்துஉணர்ச்சிகள் படத்தை எழுதி இயக்கினார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய விஷயத்தை எடுத்து படமாக்கி, விமர்சகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். 1978-ல்ஆர்.சி.சக்தி இயக்கிய “மனிதரில் இத்தனை நிறங்களா” படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இதில் கமல் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டில் ரஜினியை வைத்து “தர்மயுத்தம்“ படத்தை இயக்கி வெற்றிகண்டார். லட்சுமியை வைத்து அவர் இயக்கிய “சிறை” பெரும் வெற்றிபெற்றது. மேலும்ரகுவரன் நடித்த “கூட்டுப் புழுக்கள்”, விஜயகாந்த் நடித்த “மனக்கணக்கு” உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட படங்களை இயக்கியவர்

தமிழக அரசின் விருதையும் பெற்றது. ஆர்.சி.சக்தி கடைசியாக இயக்கிய படம் “பத்தினிப் பெண்”. 1993-ல் வெளியான இந்தப்படத்துக்கு, தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதும், இவருக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதும் கிடைத்தன.

Leave A Reply

Your email address will not be published.