ரெட் ஜெயன்ட் வெளியிடும் பிரபாஸின் ராதேஷியாம்

1

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமை வரும் மார்ச் 11 அன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வழங்குகிறது.

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’, மார்ச் 11 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

காதலுக்கும் விதிக்கும் இடையே நடைபெறும் போராட்டமான ‘ராதே ஷியாம்’ படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். அவரது காதலியாக டாக்டர் பிரேர்னா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.

இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கான பின்னணி இசையை எஸ் எஸ் தமன் அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார். வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷியாம்’ வெளியாகவுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.