இயக்குநர் அரவிந்த் சுவாமியுடன் பணிபுரிந்தது, அற்புத அனுபவம்

நடிகை ரித்விகா !

1

 

தென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் வெற்றியாள ருமான நடிகை ரித்விகா, Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற் றியது, மிகச் சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார். “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச் சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரௌத்திரம்” கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். நவரசங் களுல் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. “நவராசா” 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி Netflix இல் உலகளவில் திரையிடப் படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.