நடிகர் ஆர் என் ஆர் மனோகர் திடீர் மரணம்

0

நடிகரும் இயக்குனரும் கதாசிரியருமான ஆர் என் ஆர் மனோகர் (54) இன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார்.
1994-ல் ‘மைந்தன்’ படம் மூலம் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் அறிமுகமானார் .
1995- ம் வருடம் ‘ கோலங்கள்’ படத்தில் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் பணியற்றிய தோடு அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். ஹென்றி தயாரித்த ‘கோலங்கள்’ படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதுமை பித்தன், தென்னவன், புன்னகை பூவே, வந்தே மாதரம், ஆகிய பாடங்களிலும் கதாசிரியராக பணியாற்றிய இவர் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய படங்கள் கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

*கோலங்கள்* முதல் *டெடி* வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் வசனகர்த்தாவுமான RNRமனோகர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த இருபது நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 8.30 மணிக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். .

இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.

#RIPRNRManohar

Leave A Reply

Your email address will not be published.