ஏழை மாணவியை தத்தெடுத்தார் ரோஜா

14

ஏழை மாணவி ஒருவரை நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா தத்தெடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார் நடிகை ரோஜா. இவர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் இருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டிக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி, ஆந்திராவிலுள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் தங்கி படித்து வந்த புஷ்பகுமாரி என்ற மாணவியை ரோஜா தத்தெடுத்துள்ளார்.

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று புஷ்பகுமாரி தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாகவும் அவரை தத்தெடுப்பதாகவும் ரோஜா அறிவித்துள்ளார். ஆதரவற்றோர் இல்லத்துக்கு நேற்று சென்ற அவர், மாணவியை தத்தெடுப்பதற்கான நடைமுறைகளின்படி ஆவணங்களில் கையொப்பமிட்டார். பின்னர் மாணவியை தன்னுடன் அழைத்து சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.