படம்:2000
நடிப்பு: பாரதி கிருஷ்ணகுமார், கராத்தே வெங்கடேஷ்,அய்யநாதன், வர்ஷிகா, தோழர் ஓவியா, தோழர் தியாகு
இசை:இனியவன்
ஒளிப்பதிவு: பிரிமுஸ் தாஸ்
தயாரிப்பு:கோ.பச்சியப்பன்
இயக்கம்: ருத்ரன்
நீண்ட வருடங்களுக்கு பிறகு விவசாயி அய்யநாதன் மனைவி கர்ப்பிணியாகிறார். பிரசவத்துக்கு அவசர சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது. ஏடிஎம்மில் வரும் 2000 ரூபாய் நோட்டில் பால்பாயிண்ட் மையால் எழுதி இருப்பதால் அதை மருந்துக்கடையில் கொடுக்கும்போது செல்லாது என்று சொல்லி மருந்து தர மறுகின்றனர். சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் குழந்தை இறக்கிறது. இதற்கு காரணமான அனைவர் மீதும் விவசாயி கோர்ட்டில் வக்கீல் பாரதி கிருஷ்ணகுமார் மூலம் வழக்கு தொடுக்கிறார். இன்னொருபுறம் வக்கீலின் உதவியாளர் ருத்ரன் உயர் வகுப்பு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள, இதனால் பெண்ணின் பெற்றோர் ருத்ரனை படுகொலைசெய்ய திட்டமிடுகின்றனர். சாதி ஆணவக் கொலை தொடர்பாக ருத்ரன் வழக்கு தொடுக்கிறார். இந்த 2வழக்கும் படம் முழுவதையும் ஆக்ரமித்து அதிரடி காட்டி இருக்கிறது.
இப்படத்தில் பாலன் என்ற வக்கீலாக பாரதிகிருஷ்ணகுமார், விக்னேஷாக ருத்ரன் பராசு நடித்திருக்கின்றனர். விவசாயியாக அய்யநாதன் , அரசு வழக்கறிஞராக ஷர்னிகா, வக்கீல் ராமதாஸாக கராத்தே வெங்கடேஷ் நடித்துள்ளனர்.
ஏடிஎம் மையங்களில் நிரப்பும் ரூபாய் நோட்டு முதல் அது மக்களின் கைகளில் கிடைக்கும் வரை நடக்கும் வழிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம் முதல் மத்திய அரசின் அதிகார அத்துமீறல் வரை அக்குவேறு ஆணிவேறாக பீய்த்து காட்டி இருக்கின்றனர்.
இன்னொருபுறம் ஆணவக் கொலைகள் பற்றியும் வாதங்களை புதிய கோனத்தில் கையாண்டு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியும் இருக்கிறார் இயக்குனர் ருத்ரன்.
படத்தில் நடித்திருப்பது பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் காட்சிகள் புதிதாக இருக்கிறது ஆனால் அதே வசனங்களை பிரபலங்கள் யாராவது பேசி இருந்தால் இந்நேரம் பெரிய போராட்டமே வெடித்திருக்கும்.
இசை அமைப்பாளர் இனியவன். ஒளிப்பதிவாளர் பிரிமுஸ் தாஸ் காட்சிகளை மிகைப்படுத்த எந்த முயற்சியும் செய்யாதது பிளஸ். அதனால்தான் வசனங்கள் பேசப்படுவதாகவும், கவனிக்க தகுந்தவகையிலும் காதில் ரீங்காராமிடுகிறது.
ரூ 2000 – சட்டத் தெளிவுடன் கூடிய அற்புத படைப்பு.