நடிகர் கவுண்டமணி நலமுடன் இருக்கிறார்.

யூ டியூபில் வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை

19

300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்கள் மற்றும் ஹீரோவாகவும் நடித்துள்ளவர் கவுண்டமணி. அவரைப்பற்றி இணையதள யூ டியூபில் வதந்தி பரவியது. இதையறிந்து  கவுண்டமணி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவரது மேனேஜர் விஜயமுரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

 

யூ டியூப்பில் நடிகர் கவுண்டமணி அவர்களைப் பற்றி வதந்தியை கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இது போல் தவறான செய்தியை பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார். அவர்களே அந்த யூ டியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விஜயமுரளி கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.