எஸ். தாணு, தனுஷ், விஜய்சேதுபதிக்கு தேசிய விருது

2
 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று தொடங்கியது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப் புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணைமந்திரி எல். முருகன் கலந்துகொண் டனர். மொழிவாரியாக விருதுகள் வழங்கப் பட்டன. 
அசுரன் படத்துக்காக தேசிய விருதை தயாரிப் பாளர் எஸ்.தாணு மற்றும்  இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் விருது  பெற்றுக்கொண் டனர்.
வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இரண்டாவது முறை யாகும். அசுரன் படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது  தனுசுக்கு வழங்கப்பட்டது. .ஏற்கனவே தனுஷ் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை விஜய் சேதுபதி  ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக் காக பெற்றார்
கண்ணான கண்ணே… (விஸ்வாசம்) பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய  விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், ‘கேடி (எ) கருப்பு துரை’ என்ற தமிழ் படத்தில் நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.
 ‘போன்ஸ்லே’ என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், ‘மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி’ மற்றும் ‘பங்கா’ ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெற்றனர். இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, ‘மரைக்காயர் அரபிக் கடலின்டே சிம்கம்’ என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.