சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாகும் சாயிஷா

14

வனமகன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர். அதன் பிறகு ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் படங்களில் நடித்தார். இதற்கிடையில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு டெடி என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

திருமணத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த சாயிஷா, கன்னடத்தில் இவர் அதனால் என்ற படத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்கிறார். இதனை சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார்.

தற்போது தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவின் 106வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். புனித் ராஜ்குமார், பாலகிருஷ்ணா என்ற சீனியர் ஹீரோக்களுக்கு அவர் ஜோடியாக நடிப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.