ஹாலிவுட்டில் சாக்ஷி

16

 

உயர்திரு 420, காலா, விசுவாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது வல்லதேசம் படத்தை இயக்கிய என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்கும் 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

இப்படம் மூலம் நடிகை சாக்ஷி அகர்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில்  பால்டெலி, சீன் கார்ன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி என்.டி. நந்தா கூறியதாவது :

இது ஆக்ஷன் திரில்லர் கதை. தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதலை சொல்லும் படம். தமிழ் இயக்குனர்களும் ஹாலிவுட் படங்களை இயக்க முடியும் என்பதை காட்டவே இந்த படத்தை இயக்கி உள்ளேன்.

ஹாலிவுட் நடிகைக்கான எல்லா தகுதியும் உள்ள சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றார்.

படக் குழுவினர் கூறுகையில், பாலிவுட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல, கோலிவுட்டில் இருப்பவர்களும் ஹோலிவுட்டில் கலக்க முடியும். இதை சாக்ஷி அகர்வால் நிரூபித்துள்ளார். இப்படம் மூலம், அவர் அடுத்த தளத்திற்கு செல்வார் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.