இயக்குனர் விசு லட்சிய படம் ’‌ சம்சாரம்‌ அது மின்சாரம்‌ -2 ’ உருவாகிறது

கடைசியாக விசு எழுதிய கதை வசன ஸ்கிரிபட்..

17
1986ம் ஆண்டு  ஜூலை மாதம் 18ம் தேதி விசு இயக்கி நடித்த குடும்ப படம் சம்சாரம்  அது மின்சாரம் படம் வெளியானது.  இதில் ரகுவரன் சந்திரசேகர், லட்சுமி. இளவரசி போன்றவர் களும் நடித்திருந்தார். ஏவி எம் நிறுவனம் தயாரித்த இப்படம்  சூப்பர் ஹிட் ஆனது. தேசிய விருதும் வென்றது.
இத்தனை வருடங்கள் கழித்து  மறைந்த விசுவின்  சம்சாரம் மின்சாரம் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது.

மறைந்த இயக்குனர்‌ விசு‌ கடைசியாக கதை, திரைக்கதை, வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2′ அவரின்‌ லட்சிய படைப்பு. இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ ராஜா தயாரிக்கிறார்‌.


இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து:
விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ உலகமகா உத்தமர்கள்‌”
பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி போன்ற படங்களை தயாரித்து வருகிறது.
சம்சாரம்‌ அது மின்சாரம்‌ – 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌.
இவர்‌ ராஜ்‌ டிவியில்‌ அகடவிகடம்‌ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்‌. இசை. பரத்வாஜ்‌. பாடல்கள்‌  பா.விஜய்‌ ஒளிப்பதிவு ராஜவேல்‌ மோகன்‌. படத்தொகுப்பு – சுரேஷ்‌ அர்ஸ்‌. கலை வனராஜ்‌ மக்கள்‌ தொடர்பு – டைமண்ட்‌ பாபு
தயாரிப்பு நிர்வாகம்‌ – ரமணி உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌.

இதில்‌ முக்கிய கதாபாத்திரத்தில்‌ நடிக்க ராஜ்கிரண்‌ வசம்‌ பேசப்படுகிறது. மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக்கொண் டிருக்கிறது.

“சம்சாரம்‌ அது மின்சாரம்‌ – 2” திரைப்படத்தின்‌ கதையை பற்றி இயக்குனர்‌
பாஸ்கர்ராஜ்‌ கூறுகையில்‌, ’இது சிறுவர்கள்‌, இளைஞர்கள்‌, பெரியவர்கள்‌, அனைவரும்‌ ரசிக்ககூடிய
கதம்பமான ஒரு குடூம்ப கதை. அனைத்து தரப்பட்ட மக்களையும்‌ திரையரங்கு நோக்கி வரவழைக்கும்‌
இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை.

இன்னொரு வீட்டில்‌ மின்சாரமாக இருக்கும்‌ சம்சாரத்தின்‌ கதை’ என்றுகூறுகிறார்‌.

Leave A Reply

Your email address will not be published.