சமூக நீதி கூட்டமைப்பினர் ம நீ ம தலைவர் கமல்ஹாசனுடன் சந்திப்பு

0

நேற்று (22.7.21) நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நம்மவர் கமல் ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்த சமுதாயத்தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். நம்மவர், அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் அதுபற்றி தான் ஏற்கனவே கூறிய கருத்துக்களை அவர்களிடம் நினைவுபடுத்தி,விரைவில் நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும் கூறினார்.

நாளை நமதே!

இந்த தகவலை மக்கள்  நீதி மய்யம் தெரிவித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.