சங்கத்தலைவன் (பட விமர்சனம்)

18

படம்: சங்கத்தலைவன்
நடிப்பு: சமுத்திரக்கனி, கருணாஸ், சோனு லட்சுமி, மாரிமுத்து,
இசை: ராபர்ட் சற்குணம்
ஒளிப்பதிவு: சீனிவாசன் தேவாம்சம்
தயாரிப்பு: வெற்றி மாறன், உதயகுமார்
இயக்கம்: மணிகண்டன்

மாரிமுத்து நடத்தும் மின்விசை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் கருணாஸ்.  மாரி முத்துவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரான இவர்  சங்கம் நடத்தும் தலைவர் சமுத்திரக்கனிமற்றும்  நிர்வாகிகளை பார்த்து பயப்படுகிறார். நிறுவனத்தில் வேலை பார்க்கும்  பெண் ஒருவரின்  கை மிஷினில் சிக்கி துண்டாகிறது. இதை மூடி மறைக்க பார்க்கும் முதலாளி மாரிமுத்துவின் போக்கு பிடிக்காமல் அந்த  விஷயத்தை சங்க தலைவர் சமுத்திரக்கனியிடம் தெரிவிக்கிறார். அவர் இந்த விஷயத்தில் தலையிட்டு நஷ்ட ஈடு பெற்றுத் தருகிறார். கருணாஸ்தான இதை சமுத்திரக்கனியிடம் தெரிவித்தார் என்பதை அறிந்து அவரை வேலையைவிட்டு துரத்துத்து வதுடன் அவரை கொல்லவும் திட்டம் தீட்டுகிறார்.  அதிலிருந்து கருணாஸ் தப்பித்தாரா என்பதற்க்கு படம் பதில் சொல்கிறது.

சிவப்பு சட்டை அணிந்து மேடைகளில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் சமுத்திரக்கனி. அப்படியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். தொழிலாளர்களின்  உழைப்புக்கு   குறைந்த ஊதியம்  தரும் முதலாளிகளை  தட்டிக்கேட்டு நிஜ சங்க தலைவன் ஆகி இருக்கிறார் . கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப தனது கம்பீரத்தையும் வெளிக்கொண்டுவந்திருப்பது வேடத்துக்கு பிளஸ்.

சங்கம் என்றாலே பயப்படும் கருணாஸ் ஒரு கட்டத்தில் அவரே சங்கத்துக்கு தலைவராகி போரட்டத்தில் குதித்து பரபரக்க வைக்கிறார். சோனு லட்சுமி தனது காதலை கருணாஸிடம், வெளிப்படுத்த முயல ஆனால் அதை ஏற்க தயங்கும் கருணாஸ் எதாரத்தமான நடிப்பில் மிளிர்கிறார். சித்தப்பா மாரிமுத்துவின் முதலாளித்துவ போக்கு பிடிக்காமல் கருணாஸிடம் நெருக்கம் காட்டி காதல் செய்யும் சராசரி பெண்ணாக நடித்திருக்கிறார் சோனு லட்சுமி. சமுத்திரக்கனி மனைவியாக வரும் ரம்யா ஒரு தலைவனின் மனைவிக்கு உதாரணமாகி இருக்கிறார்.
இப்படியொரு கதையை இயக்குவதற்கு சில இயக்குனர்கள் தயக்கம் காட்டுவார்கள் ஆனால் இயக்குனர் மணிகண்டன் தெளிவாக கதையை கையாண்டு முதலாளித்துவத்தின் ஆதிக்க மனப்பான்மையை தோலுரித்துக்காட்டி இருக்கிறார்.

இயக்குனர் வெற்றி மாறன் உதயகுமார் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கதையை பாரதிநாதன் எழுதி உள்ளார்.  ஒளிப்பதிவாளர் சீனிவாசன் தேவாம்சம் காட்சிகளை மிடைப்படுத்தாமல் எதர்த்தமான பதிவாக்கி மனதில் பதிய வைக்கிறார். புது இசை அமைப்பாளர் ராபர்ட் சற்குணம் இசை காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.

’சங்கத்தலைவன்’  சிவப்பு சிந்தனையாளன்.

Leave A Reply

Your email address will not be published.