சசிகுமார் நடிக்கும் அயோத்தி

27

அயோத்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.

மதுரை மற்றும் ராமேஸ் வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று இயக்குனர் மந்திர மூர்த்தி கூறினார்.

படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், “எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத் தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்,” என்றார்.

மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,” என்றார் அவர்.

‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக் கிறார், மாதேஷ் ஒளிப் பதிவு செய்கிறார்

இப்படத்தின் கலை துரைராஜ். படத்தொகுப்பு சான் லோகேஷ் நடனம் ஷரீப்.  சண்டைக்காட்சிகள் பிரபு.  மக்கள் தொடர்பு நிகில் முருகன். நிர்வாக தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன். தயாரிப்பு நிர்வாகி செல்வம்-அஷ்ரப்.
தயாரிப்பு ஒருங்கிணைப் பாளர் சக்தி ரூபிணி, ஜெயராம்.

இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி மந்திரமூர்த்தி இயக்குகிறார்.

Leave A Reply

Your email address will not be published.