சூது கவ்வும் 2வில் சத்யராஜ்

14

விஜய் சேதுபதி, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, பிபாபி சிம்ஹா உள் பட பலர் நடித்த படம் சூது கவ்வும். நலன் குமராசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த சி.வி. குமார், இதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ளார். பிரபுதேவா, லட்சுமி மேனன் நடித்த யங் மங் சங் படத்தை இயக்கியவர் அர்ஜுன். இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. இவர்தான் சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளார். இதில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடம் ஏற்க உள்ளனர். விரைவில் இந்த பட அறிவிப்பு வெளியாகும்.

Leave A Reply

Your email address will not be published.