எஸ்.பி.பாலசுப்ரமணியம் படத்திறப்பு – இசைகலைஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

75

தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள இசை அமைப்பாளர் தினா தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளனர்.

தலைவராக தினாவும், ஜோனா பக்தகுமார் பொதுச் செயலாளராகவும், மகேஷ் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர்.

செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு 

இன்று புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா  சங்க வளாகத்தில் நடக்கிறது. செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.  பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்குகிறார்.

திருமதி.எஸ்.பி. சாவித்ரி, திருமதி.எஸ்.பி.சைலஜா, திரு.எஸ்.பி.பி.சரண், திருமதி.எஸ்.பி.பி.பல்லவி முன்னிலையில், திரு.வாசு ராவ் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் படத்தை திறந்து வைக்கிறார். 

தேர்தல் அதிகாரி டி.கே.சண்முகசுந்தரம், துணை தேர்தல் அதிகாரி டி.ரமேஷ் பிரபாகரன் 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.