செம திமிரு (பட விமர்சனம்)

67

படம்: செம திமிரு
நடிப்பு: துருவா சர்ஜா, ராஷ்மிகா.
ஒளிப்பதிவு: விஜய்மில்டன்
இசை: சந்தன் ஷெட்டி
தயாரிப்பு:பி.கங்காதர், எஸ்.சிவா, அர்ஜுன்
இயக்கம்: நந்த கிஷோர்
ரிலீஸ்:டி.முருகானந்தம்

தந்தை மீது பாசமாக இருக்கிறார் துருவா   ஆனால் தந்தையை  கார் ஏற்றி கொல்கிறார்கள். தனியாக இருக்கும் துருவாவின் தாயை சிலர் நோட்டம் விட அவர் வேறுவொருவரை திருமணம் செய்துகொள்கிறார். தாயை பிரியும் துருவா அவரை தன்னுடன் வர கேட்கிறார். அதற்கு அவர் மறுக்கிறார். எதையாவது செய்து தாயை தன்னுடன் வரவழைக்க எண்ணும் துருவா ரவுடியாக மாறுகிறார். ஊரார் மீது வெறுப்பு காட்டி பெரும் முதலாளிக்கு ஆதரவாக செயல்படுகிறார். ஒரு கட்டத்தில் தன் தங்கையையே அந்த கூட்டத்துக்கு பணயம் வைக்க துணிகிறார். அதன்பிறகு நடப்பதை செண்ட்டிமென்ட் டச்சுடன் விளக்குகிறது படம்.

கன்னட நடிகரும், நம்மூர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் தங்கை மகனுமான துருவா சர்ஜா முதன்முறையாக செம திமிரு படம் மூலம் தமிழில் என்ட்ரி தந்திருக்கிறார். கட்டுமஸ்த்தான உடம்பு, அந்தர் செய்யும் ஆக்‌ஷன் காட்சிகள்: என தூள் கிளப்பி இருக்கிறார். முரட்டுத்தனமான அவரது நடிப்பில் ஆக்ரோஷமும் வெளிப்படுகிறது, சென்டிமென்ட்டும்  பொங்கி வருகிறது. தன் மீது தனது தாய் போலீஸில் புகார் கொடுத்ததை அறிந்ததும் கைதாகி சிறைக்குள் செல்வதும் அவரது அன்புக்காக ஏங்குவதமாக ஆஜானபாகு தோற்றமாக இருந்தாலும் குழந்ததனமான மனதை வெளிப்படுத்த தவறவில்லை.

பிராமண வீட்டு பெண் ராஷ்மிகாவை துரத்தி துரத்தி காதலிப்பதும், அவர் வீட்டுக்கு சென்று ரகளை செய்வதுமாக காமெடி செய்து மனதை இளகுவக்குகிறார் துருவா. சண்டை காட்சிகளில் அர்ஜூனின் வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும் உடலை வளைத்து ஆடி கவர்கிறார். கிளைமாக்ஸ்சண்டை காட்சி குறிப்பிடும்படி படமாகி இருக்கிறது. வெளிநாட்டு ஜிம் பாடி கொண்ட அடியாட்கள் துருவாவை ஒட்டுமொத்தமாக சேர்ந்து தாக்கி தூக்கி வீசுவதும் பிறகு அவர்கள் 4 பேரையும் துருவா துவம்சம் செய்வதும் தூள் பறக்கும் சண்டை காட்சி.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு காட்சிகளில் அனல் பறக்கவிட்டிருக்கிறார். சந்தன் செட்டி இசை அதிரடி. படம்  முழுக்க வரும் ஆஞ்சநேயர் சிலையும் தன்னை எல்லோரும் ஒதுக்கியதும் அந்த சிலை முன் நின்று துர்வா வசனம் பேசுவதும் உருக்கம்.

செம திமிரு- அக்‌ஷன் த்ரில்லர்.

Leave A Reply

Your email address will not be published.